நடிகர் அஜித்குமார் சினிமா உலகில் ஓடிக்கொண்டு இருந்தாலும் தன்னை நம்பி வருகின்ற சினிமா பிரபலங்களையும் வளர்த்துவிட ஆசை படுபவர் காரணம் தன்னை போல வரும் சினிமா உலகில் போடுகின்றனர் என்ற காரணம்தான்.
நடிகர் அஜித் குமார் தன் படங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு அதிக ரோல் கொடுத்து மற்றவர்களின் நடிப்பு திறமையை பார்ப்பதோடு அவர்களும் பிரபலமடைய வேண்டும் என நினைக்கும் உள்ளமும் கொண்டவர் அதனை பல பிரபலங்களை நிகழ்ச்சிகளில் வெளிப்படையாக கூறியது உண்டு.
இப்பொழுதுகூட அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை இப்படத்தில் கூட நடிகர் அஜித் அப்படி ஒன்றை செய்துள்ளாராம். வலிமை திரைப்படம் வருகின்ற 13ம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படம் வேற லெவலில் இருக்கும் என தெரியவந்துள்ளது ஏனென்றால் வலிமை படத்திலிருந்து இதுவரை வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடங்கி கடைசியாக வெளிவந்த ட்ரைலர் வரை அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது மேலும் வலிமை திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்று வலிமை திரைப்படத்தின் போஸ்டர்கள் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது விஜய் தேவர்கொண்டா வலிமை படத்தின் போஸ்டர்களை ரிலீஸ் செய்துள்ளார். வலிமை படத்தின் டிரைலர் நாளை கோலாகலமாக தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தெலுங்கில் வெளியான வலிமை படத்தின் ட்ரைலரில் அஜித்தை சின்னதாகவும் கார்த்திகேயாவை பெரிதாகவும் காட்டி உள்ளனர்.
ஏன் இவ்வாறு செய்தது குறித்து பல்வேறு கேள்விகள் வெளிவந்த நிலையில் அதற்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது நடிகர் அஜித்குமார் தான் வில்லன் கார்த்திகேயா வளர்ந்துவரும் ஒரு ஹீரோ தெலுங்கில் அவருக்கு இன்னும் நல்ல வரவேற்பு கிடைக்க வேண்டுமென்றால் வலிமை திரைப் படத்தின் போஸ்டரை இப்படியே மாற்றங்கள் என அறிவுரை கூறியதே அஜித் தானாம். இதை கண்ட அஜித் ரசிகர்கள் தற்போது மெய்சிலிர்த்து போயுள்ளனர்.