விஜய், கார்த்திக் பட வில்லனை கொக்கி போட்டு தூக்கிய மகிழ் திருமேனி.! விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு டப் கொடுக்கப் போகும் பிரபல நடிகர்..

vidamuyarchi
vidamuyarchi

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் பிரபல வில்லன் நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தனது 62வது திரைப்படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க இருக்கும் நிலையில் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது மேலும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் குறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்பட்ட நிலையில் இதுவரையிலும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தற்பொழுது அஜித் மகிழ் திருமேனி இருவரும் லண்டன் சென்று இருக்கும் நிலையில் அவர்கள் இந்தியா திரும்பியதும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னும் சில தினங்களில் அஜித் இந்தியாவிற்கு திரும்ப இருக்கும் நிலையில் புது லுக்கில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடக்க உள்ளதாம் இதற்காக செட் அமைக்கும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருவதாகவும் விடாமுயற்சி படம் ஷூட்டிங் அக்டோபர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட குழு முடிவெடுத்து உள்ளதாம்.

இவ்வாறு விரைவில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் அஜித்தை தவிர மேலும் வேறு யார் நடிக்க போகிறார் என்பது குறித்த விவரம் இதுவரையிலும் பெரிய வெளியாகவில்லை. ஆனால் சின்ன சின்ன தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இந்த படத்தில் திரிஷா இணைந்தால் அஜத்துடன் இவர் ஐந்தாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை அடுத்து விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க போகும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி மற்றும் விஜய்யின் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து மிரட்டு இருந்த நடிகர் அர்ஜுன் தாஸ் தான் விடாமுயற்சி படத்திலும் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். மேலும் நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.