அஜித் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இறுதியாக இத்திரைப்படத்தை விரைவில் எடுத்த முடித்து விட வேண்டும் என்று மிகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்புகள் நடைபெறக் கூடாது என்று அரசு உத்தரவு போட்டுள்ளது இதன் காரணமாக இன்னும் மீதி பத்து நாட்களின் படப்பிடிப்புகள் இருக்கிறது.
வலிமை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வெளிநாட்டில் தான் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் வினோத் மிகவும் உறுதியாக இருக்கிறாராம்.எனவே வெளிநாடு பயணம் செல்வதற்காக அனுமதி வேண்டும் என்பதற்காக காத்து வருகிறார்கள்.
எனவே வலிமை திரைப்படத்தின் மீதமுள்ள 10 நாட்களின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்தவுடன் ஜூலை முதல் வாரத்திலேயே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டையும் இணைத்து வெளியிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதோடு இத்திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமாக இருப்பதற்கு வினோத் தான் காரணம் என்றும் சிலர் கூறி உள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாசம் டீஸர், அக்டோபர் மாதம் ட்ரைலர் அக்டோபர் மாத இறுதியில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் அஜித்தின் ரசிகர்களுக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒரே மகிழ்ச்சி தான்.