நடிகர் ஆதியின் திருமணத்தில் கலந்துகொள்ள இருக்கும் நடிகர் அஜித்.!

aathi ajith
aathi ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்தான் நடிகர் அஜித். தமிழ் திரைவுலகில் ஒரு அங்கமாக திகழும் இவர் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.அதுவும் முக்கியமாக இவர் நடிப்பில் உருவாகிவரும் ஏராளமான திரைப்படங்கள் சமூகத்திற்கு நல்ல கருத்தினை தரும் வகையில் அமைந்து வருகிறது.

இதன் காரணமாக இவருக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் இருந்துவரும் நிலையில் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

இவர் நடிப்பில் உருவாகி வரும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வருகின்றனர். கடைசி வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தினை போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து போனிக்கபூர் தயாரிப்பில், ஹஸ்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61  அஜித் நடித்து வருகிறார். இதனை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரமோஷன் தயாரிப்பில் AK 62 திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.மேலும் இத்திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கும், திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணிக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தற்பொழுது மே 18ஆம் தேதி இருவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகர் ஆதி ஆதரவை சேர்ந்தவர் என்றாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான் மேலும் நிக்கி கல்ராணியின் சென்னையில் செட்டில் ஆனவர் தான்.

இந்நிலையில் தற்போது இவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் திருமணத்திற்கு வருவதற்காக நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஆதி நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து இருந்தார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது எனவே ரசிகர்கள் அனைவரும் அஜீத் ஆதியின் திருமணத்தில் கலந்து கொள்வார் என்று மிகவும் ஆவலுடன் காத்து வருகிறார்கள்.

aathi ajith
aathi ajith