போனி கபூர் மற்றும் வினோத் ஆகியவர்களின் கூட்டணியில் மூன்றாவது முறையாக தல அஜித் நடிக்கும் திரைப்படம் தான் துணிவு இந்த திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் நடித்துள்ளார் இவ்வாறு உருவான இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருப்பதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடல் பாடியது மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்கள் இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியானதை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் வாடை அதிகளவு அடிப்பதாக ரசிகர்கள் தங்களுடைய கருத்தினை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலரை வைத்து பார்க்கும் பொழுது ஹாலிவுட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இன்சைட் மேன் என்ற திரைப்படத்தின் காப்பி தான் துணிவு என்பது ரசிகர்களின் மனதில் தோன்ற ஆரம்பித்துள்ளது அதுமட்டுமில்லாமல் இதனை ப்ளூ சட்டை மாறன் அவர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் இந்த ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பி தான் துணிவு என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த திரைப்படத்தை ஹாலிவுட் லெவலுக்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது ஏனெனில் கோலிவுட் சினிமாவில் வெளியாகிய பல்வேறு திரைப்படங்களின் கதைகளை கோர்த்து தான் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்கள்.
அந்த வகையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் மற்றும் சிவாஜி ஆகிய திரைப்படங்கள் மட்டுமின்றி அஜித் நடிப்பில் வெளியான வில்லன் திரைப்படத்தையும் நாணயம் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களையும் இணைத்து உருவாகிய ஒரு கலவை தான் துணிவு என்று கூறுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த டிரைலரை மட்டும் பார்த்து ஒரு திரைப்படத்தை முடிவு செய்து விட முடியாது ஆகையால் இந்த திரைப்படத்தில் புதிய கதை மற்றும் திரை கதையை வைத்து உருவாக்கி உள்ளார்களா அல்லது ஏற்கனவே உள்ள கதையில் புதிய திரை கதையை திணித்துள்ளார்களா என்பது தெரியவில்லை.
ஆனால் இது குறித்து இயக்குனர்களிடம் கேள்வி எழுப்பினால் அவர்கள் ஸ்வரங்கள் ஏழு வகை தான் என்று விதவிதமான வார்த்தைகளை விட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். ஆனால் ரசிகர்கள் இந்த திரைப்படம் இந்த திரைப்படத்தின் காப்பி என புட்டு புட்டு சமூக வலைதள பக்கத்தில் சிரிக்க வைப்பது வழக்கமாகி போய்விட்டது.