தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். சினிமா உலகில் அதிக தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் மட்டும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதை உணர்ந்து கொண்ட அஜித்தை தொடர்ந்து கடினமாக உழைத்து படங்களில் நடித்து வருகிறார் அப்படி இவர் சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன.
அந்த வகையில் விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து வலிமை திரைப்படமும் ரசிகர்களையும் தாண்டி மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது அந்த அளவிற்கு இந்த படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தையும் பொறிந்து இருக்கின்றன.
இதுவரை வலிமை திரைப்படம் சுமார் 180 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்து அசத்தி ஓடிக்கொண்டிருக்கிறது. வலிமை திரைப்படம் ஒருபக்கம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் நடிகர் அஜித்குமார் மீண்டும் ஒரு முறை ஹச். வினோத்துடன் கைகோர்த்து அஜித் தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்காக அதிரடியாக உடல் எடையைக் குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறி உள்ளார். இந்த படத்தின் பூஜை வெகுவிரைவிலேயே போடப்பட்டு அடுத்ததாக படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது இது இப்படி இருக்க இன்னொரு சூப்பர் தகவலும் கிடைத்துள்ளது.
ஏற்கனவே அஜித்தும், சுதா கொங்கரா இருவரும் இணையப் போகிறார்கள் என்ற தகவல் தீயாய் பரவி வந்த நிலையில் இதுகுறித்து நடிகரும், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சில தகவல்களை கொடுத்துள்ளார். வெகுவிரைவிலேயே கண்டிப்பாக அஜித் சுதா கொங்கரா இணைய உள்ளார்கள் என கூறி உள்ளார் அப்படி வைத்துப் பார்க்கும் போது அஜித்தின் 62 வது படத்தை இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.