WATER CROSS -ல் பைக்கை சாதூர்யமாக ஓட்டிய நடிகர் அஜித் – வீடியோவை பார்த்து பயந்த ரசிகர்கள்..!

ajith
ajith

நடிகர் அஜித்குமார் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை இயக்குனர் ஹச். வினோத் உடன் கைகோர்த்து அஜித் நடித்து வரும் திரைப்படம் தான் ஏகே 61 இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா.

மற்றும் சமுத்திரக்கனி, யோகி பாபு, அஜய், மகாநதி சங்கர் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து நிலையில் அண்மையில் இந்த படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள அரக்கு பள்ளத் தாக்கில் பைக் ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

அதனை தொடர்ந்து படக்குழு இறுதி கட்ட கட்சிக்காக வெளிநாடு செல்ல இருக்கிறது அதற்கு முன்பாக நடிகர் அஜித் லடாக் பயணம் மேற்கொண்டுள்ளார் அவருடன் ஏகே 61 படம் நடிகை மஞ்சு வாரியரும் உடன் போய் உள்ளார் அதன் புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து இணையதளத்தை அதிர வைக்கின்றன.

இது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் லடாக் நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார் அந்த பயணம் கரடு முரடான சாலைகள் பலவற்றையும் சந்தித்து தான் செல்ல வேண்டும் அந்த வகையில் தற்போது நடிகர் அஜித்குமார் லடாக் நோக்கி போகும்போது ஒரு அருவியை கடந்துள்ளார்.

அது ரொம்ப சூப்பராக இருந்துள்ளது அந்த வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி  வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் செம்ம மாஸ், சூப்பர் என கமெண்ட்களை அள்ளி வீசி அசத்தி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் நடிகர் அந்த அருவியை பைக்கில் கடந்த போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவை..