தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் அவர்தான் நடிகர் அஜித் இவரை தல அஜித் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது வலிமை எனும் திரைப்படத்தில் சுமார் இரண்டு வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை வினோத் அவர்கள் தான் இயக்கி வருகிறார் மேலும் வினோத்துடன் ஏற்கனவே தல அஜித் கூட்டணி வைத்துள்ளது நமக்கு தெரிந்த விஷயம் இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது மேலும் இத்திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் அவர்கள்தான் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த திரைப்படத்தை விட வலிமை திரைப்படம் தரமாகவும் அதிக அளவு முதலீடு போட்டும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா அவர்கள் தான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இவருடைய இசையமைப்பில் இந்த திரைப்படத்தில் இருந்து வெளிவந்த வேற மாதிரி என்ற பாடல் அந்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகிய அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது இந்நிலையில் 90 சதவீத படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கிளைமாக்ஸ் காட்சியானது வெளிநாட்டில் எடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அந்த வகையில் ரஷ்யாவிற்கு சென்று மீதம் உள்ள மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டார்களாம்.இந்நிலையில் இரண்டு வருடமாக இழுத்துக் கொண்டிருந்த இந்த படப்பிடிப்பு ஆனது தற்போது முழுவதும் முடிவடைந்ததால் தல அஜித் நிம்மதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த படப்பிடிப்பு ஆரம்பம் கால நிலையில் இருந்து பல்வேறு தடைகள் உருவானது மட்டுமல்லாமல் அவருக்கு அடிபட்டு பல்வேறு மன உளைச்சல் ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் மறுபடியும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளாராம். இந்த திரைப்படத்தை மிக விறுவிறுப்பாக முடிக்க வேண்டும் என தல அஜித் தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது.