தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தல அஜித். பொதுவாக நடிகர்கள் என்றால் கருப்பு பணம் பாதி வெள்ளை பணம் பாதியாக தான் சம்பளத்தை வாங்குவார்கள். ஆனால் இவ்வாறு தான் தல அஜித்தும் பாதி கருப்பு பணமாகவும் பாதி வெள்ளை பணமாகவும் வாங்கி வந்தார் ஆனால் தற்போது முற்றிலும் கருப்பு பணம் வாங்குவதை தவிர்த்து விட்டாராம்.
தல அஜித் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பல தோல்வி படங்களை சந்தித்தார்.அதன் பிறகுதான் தனது விடாமுயற்சியினால் பல வெற்றிப் படங்களை தந்தார். இதன் மூலம் ஒரு காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இவர் இருந்ததால் தயாரிப்பாளர்கள் இவருக்கு அதிக சம்பளம் தருவதை தொடங்கினார்கள்.
இந்நிலையில் தற்பொழுது உள்ள நடிகர்கள் வாங்கும் கோடிக்கணக்கான சம்பவங்களில் ஒரு பகுதி வருமானவரி கட்டுவதற்கு போய்விடுகிறது. எனவே தான் அனைத்து நடிகர்களும் பாதி வெள்ளை பணமாகவும் மீதியை கருப்பு பணம் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அது இன்றளவும் இருந்து தான் வருகிறது.
இப்படி இருந்த அஜித்தான் ஒரு கட்டத்தில் சில பிரச்சனைகள் வந்ததால் முற்றிலும் கருப்பு பணம் வாங்குவதையே நிறுத்தி விட்டார். இவர் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இவருக்கு தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பல கோடி சம்பளமாக கொடுக்கிறார் என்ற தகவல் தீயாய் பரவியது.
அந்தவகையில் பத்திரிகையாளர்களும் நாள்தோறும் இதனைப் பற்றிக் கூறி அதனை பெரிய பிரச்சனையாக மாற்றிவிட்டார்கள். எனவே வருமான வரித்துறையினர்களும் நேரடியாக அஜீத்தின் வீட்டிற்கு விரைந்து ரைய்டு சென்றதால் அஜித் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டாராம்.
அதன் பிறகு தனக்கு தெரிந்தவர்களை வைத்து இந்த பிரச்சனையை சுமுகமாக முடித்து விட்டாராம். இந்த பிரச்சனைக்கு பிறகு தான் இவர் தயாரிப்பாளர்களிடம் கருப்பு பணம் வாங்குவது இல்லையாம். அதோட இவர் வாங்கும் சம்பளத்திற்கும் சரியாக வரி கட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.