தல அஜித் தவறவிட்ட மெகா ஹிட் திரைப்படங்கள்!! விவரம் இதோ!!

thala
thala

Actor Ajith missed to act some movies which become mega hit in future: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவர் ஆழமாக சிறந்த கதைகளை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிகிறார். அத்தகைய படங்களில் மிக பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் தற்போது அசைக்கமுடியாத சக்தியாக உருப்பெற்றுள்ளார். சில படங்களை கமிட் செய்து நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் விலகி விட்டார். அத்தகைய படங்களை மற்ற நடிகர்கள் நடித்து தமிழ் சினிமாவிற்குள் தற்பொழுது கொடிகட்டி பரந்து வருகின்றனர். அஜித் அவர்கள் நிராகரித்த படங்கள் இதோ.

1.கோ.

ஜீவா நடிப்பில் 2011ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கோ. இப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருமாறியது. இப்படத்தின் கதை அரசியல் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் நொடிக்கு நொடி சுவாரஸ்யம் அதிகரித்துக்கொண்டு இருக்கும். இப்படம் ரசிகர்களுக்கு பிடித்துப்போன படமாக இருந்தது. இந்த படம் குறைந்த செலவில் அதிக வசூலைப் பெற்ற படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முதலில் அஜித் அவர்கள் ஒப்பந்தமாகியிருந்தார் பின்னர் சில காரணங்களால் இப்படத்திலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2.சாமி.

ஹரி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த படம். சாமி படத்தில் முதலில் ஹரி அவர்கள் அஜித்தை நடிக்க தேர்வு செய்தார். பின்னர் விக்ரமை தேர்வு செய்து அப்படத்தில் நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஜீத் அவர்கள் நடித்திருந்தால் சினிமாவில் மேலும் பல வெற்றிகளை அடைந்திருப்பார் என தகவல் தெரிவிக்கின்றன.

3.ஜெமினி.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் 2002 ஆம் ஆண்டு ஜெமினி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமடைந்தார். இந்த படத்திலும் முதலில் அஜித் அவர்கள் நடிக்க இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகியதை தொடர்ந்து விக்ரம் அவர்கள் நடித்து தமிழ் சினிமாவில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார்.

4.ரன்.

2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரன். இப்படம் முழுக்க முழுக்க சுவாரஸ்யமான கதை களத்தை கொண்டு இருந்தது. இப்படம். மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முதலில் அஜித்தை நடிக்க அணுகினார்கள் படக்குழுவினர் இருப்பினும் இப்படத்தை ஒப்புக்கொள்ளவில்லை பிறகு மாதவன் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

5.கில்லி.

தெலுங்கு சினிமாவில் இருந்து ரீ-மெக் செய்யப்பட்ட படம் கில்லி இப்படத்தில் முதலில் அஜித் அவர்கள் நடிக்க இருந்தார் ஏதோ சில காரணம்தான் இப்படத்தை நிராகரித்தார். இதனை அடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் அவர்கள் இப்படத்தை தேர்வு செய்து நடித்தார். இப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தை  பிடித்துக்கொண்டார் விஜய்.

6.கஜினி.

ஏ ஆர் முருகதாஸ் அஜீத் கூட்டணியில் மிகப்பெரிய ஹிட்டடித்த படம் தீனா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தில் முருகதாஸ் அஜித்தை கமிட் செய்தார். ஆனால் இக்கதை அஜித்திற்கு பிடித்ததால் தொடக்கத்திலேயே இதனை நிராகரித்தார். படத்தில் சூர்யா அவர்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான அந்தஸ்தைப் பெற்றார். இப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது.

7.நான் கடவுள்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குவதில் வல்லவர் பாலா. இவர் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நான் கடவுள். இப்படத்தில் முதலில் அஜித் அவர்கள் நடிக்க இருந்தார். இயக்குனருக்கும் அஜித்திற்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் இப்படத்தில் இருந்து அவர் விலகினார். இதனைத்தொடர்ந்து அறிமுக நடிகரான ஆர்யா இப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தது மட்டுமல்லாமல் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்துக்கொண்டார்.

8.லவ் டு டே.

விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் லவ் டுடே. இந்த படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. விஜய் கேரியரில் இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் முதலில் அஜித் அவர்கள் நடிக்க இருந்தார் சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

9. ஜீன்ஸ்.

அஜித் அவர்கள் வாலி படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் இரட்டை கதாபாத்திரம் உள்ள ஜீன்ஸ் படத்தில் நடிக்க இருந்தார். ஏதோ சில பிரச்சனைகளால் இப்படத்தில் இருந்து விலகினார். பின்னர் பிரசாந்த் நடித்து தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரத்தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

10.நியூ 11.காக்க காக்க 12.நேருக்கு நேர் 13.தூள் 14.நந்தா போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களை தவறவிட்டுள்ளார் தல அஜித்.