Ajith Kumar: நடிகர் அஜித்குமார் விரைவில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார். விடாமுயற்சி படத்தின் அப்டேட் கடந்த மே மாதமே வெளியானதை அடுத்து நாளைய தினம் அஜர்பை ஜானில் படத்தின் சூட்டிங் துவங்க இருப்பதாக கூறப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே படப்பிடிப்பிற்காக அஜித் உள்ளிட்ட விடாமுயற்சி படக் குழுவினர்கள் அஜர்பைஜான் புறப்பட்டுள்ளார்கள். எனவே நடிகர் அஜித்தை சென்னை விமான நிலையத்தில் பார்க்க முடிந்ததை அடுத்து அங்கு ஏராளமானவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 30 ஆண்டு காலங்களாக திரைப்பயணத்தில் ஈடுபட்டு வரும் அஜித் குமார் பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
சினிமா மட்டுமல்லாமல் பைக் ரேஸ்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது இதில் பைக் ரேஸில் கலக்கி இருந்தார். இதனை அடுத்து அஜித் தனது 62 ஆவது படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தினை இயக்க உள்ளார் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் அதன் பிறகு விடாமுயற்சி அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. எனவே ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் இருந்து வந்த நிலையில் தற்பொழுது விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி நாளைய தினம் அஜர்பைஜானில் படத்தின் சூட்டிங் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜர்பை ஜானில் திட்டமிட்டுள்ள படப்பிடிப்புகள் முடித்துவிட்டு அதனை தொடர்ந்து துபாய் பாலைவனத்தில் ஒரு முக்கியமான ஃபைட் காட்சியை தொடர்ந்து சென்னையில் சில தினங்களுக்கு ஷூட்டிங் நடத்தவும் படக் குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.
எனவே அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் விடாமுயற்சி படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் நாளை தினம் படத்தின் சூட்டின் துவங்க இருப்பதால் படக் குழுவினர்கள் அஜர்பை ஜான் புறப்பட்டு சென்றுள்ளனர். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு நடிகர் அஜித் வர இவரைப் பார்த்து ரசிகர் ஒருவர் ஆசையுடன் அஜித்திடம் கைகுலுக்க வந்த நிலையில் உற்சாகத்துடன் அவருடன் அஜித் கைக்குலுக்கும் வீடியோ ஒன்றிய சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..