தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் நடிகர் அஜித்குமாரின் தந்தை இன்று அதிகாலை காலமாகி இருக்கும் சம்பவம் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் அஜித் ஹைதராபாத் சேர்ந்தவர் ஆனால் இவருடைய தந்தை தமிழ், தாய் ஹிந்தி இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளன அதில் அஜித் இரண்டாவது மகன் ஆவார்.
இந்நிலையில் அஜித் தன்னுடைய தந்தையின் இறப்பு குறித்து ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார் அது குறித்து தகவல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை 4:30 மணி அளவில் உயிரிழந்து உள்ளார். இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து உடல்நிலை மோசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
எனவே நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சென்னையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார் இவருக்கு தற்பொழுது 84 வயது எனவே அஜித்தின் குடும்பத்தினர் தங்கள் தந்தையின் இறப்பு குறித்து சோகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் எங்களது தந்தையார் திரு பி.எஸ். மணி (85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல் நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார் இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்திலேயே உயிர் நீத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும் அக்கறையோடும் கவனித்து வந்தோம் எங்கள் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
எங்கள் தந்தையார் சுமார் 60 ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில் பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும் எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைப்பேசியலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்பொழுது உள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.
எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம் எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துக்கொண்டு குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும் இறுதி சடங்கு தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும் படி வேண்டிக் கொள்கிறோம் உங்களின் இரங்கல் செய்தியை psmanifamily@gmail.com என்ற ஈமெயிலுக்கு அனுப்புங்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.