ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல.. வைரலாகும் அஜித்தின் செல்ஃபி ஃபோட்டோ

அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்து படங்கள் வெளிவர இருக்கிறது. இது தொடர்பான அப்டேட்டுகள் எப்போது வரும் என ரசிகர்கள் ஏங்கி கிடக்கின்றனர்.

இதில் விடாமுயற்சி வருட கணக்கில் தாமதமானதால் ரசிகர்களை உற்சாகப்படுத்த அஜித் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிட்டு வருவார். அதிலும் கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவை அஜித்தின் போட்டோக்கள் தான் ஆக்கிரமித்துள்ளது.

மனைவி ஷாலினியுடன் எடுத்த போட்டோ, வீடியோ செம வைரலானது. அதை அடுத்து குட் பேட் அக்லி கெட்டப்பில் உடல் எடையை குறைத்து மாசாக இருந்த போட்டோ வேற லெவலில் ரசிகர்களை கவர்ந்தது.

இப்படி தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகியுள்ளது. அதிலும் இது செல்ஃபி போட்டோ என்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. அதில் அவர் கருப்பு நிற உடை, கூலிங் கிளாஸ் என ரொம்பவும் கூலாக இருக்கிறார்.

நேற்றைய தினம் தான் இந்த போட்டோ எடுக்கப்பட்டு சுட சுட வெளியாகி இருக்கிறது. இதை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள் படுவேகமாக அதை ஷேர் செய்து வருகின்றனர். தற்போது நடிப்பை தொடர்ந்து கார் ரேசில் ஆர்வம் காட்டி வரும் அஜித் அடுத்த வருடம் நடக்கப் போகும் முக்கிய பந்தயத்திலும் கலந்து கொள்ள இருக்கிறார்.