மொய் என்ற பெயரில் பிரபல நடிகரிடம் 50 லட்சத்தை தூக்கிக் கொடுத்த தல அஜித்..! எம்மாம் பெரிய மனசு..!

ajith-siva
ajith-siva

actor ajith latest news: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர்.  படிப்படியாக தனது திறமையின் மூலமாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற தல அஜித் தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார்.

பொதுவாக தல அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டியதை மிகச் சிறப்பாக செய்து கொடுப்பது வழக்கம் தான். பொதுவாக திரை உலகில் தல அஜித்திற்கு மிக நெருக்கமான நண்பர்கள் யார் என்று கேட்டாள் பதில் சொல்வது மிகவும் கஷ்டம் தான் ஆனால் மிர்ச்சி சிவா மிக நெருக்கமாக இருப்பது ஒரு சிந்திக்க வேண்டிய விஷயமாக தான் இருக்கிறது.

ஆனால் இதற்கான பதில் தற்போது தெரியவந்துள்ளது. சிவாவின் மனைவி ஒரு பேட்மிட்டன் வீராங்கனை அதேபோலதான் தல அஜித்தின் மனைவி ஷாலினியும் பேட்மிண்டனில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் இவர்கள் இருவரும் தினசரி பேட்மின்டன் விளையாடுவார்கள்.

இதன் மூலமாக ஷாலினியும் சிவாவின் மனைவியும் மிக நெருக்கமான நண்பர்களாகி விட்டார்கள் இதனை தொடர்ந்து அடிக்கடி சிவாவும் தல அஜித்தும் சந்திக்க வேண்டி இருந்ததன் காரணமாக இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறி விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் சிவாவின் திருமணத்திற்கு தல அஜித் 50 லட்சம் மொய் வைத்துள்ளாராம். மேலும் சிவாவின் திருமணத்திற்கு ஆரம்பத்திலிருந்து திருமணம் முடியும் வரை நின்று சிவாவின் திருமணத்தை மிகச்சிறப்பாக நடத்தி கொடுத்தாராம்.

siva
siva