10 கிலோ வரை உடல் எடையை குறைத்து இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அஜித் குமார்.! விடாமுயற்சி படத்திற்காக வேற லெவல் கெட்டப்..

actor ajith kumar
actor ajith kumar

Ajith Kumar: அஜித் குமார் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிலிருந்து வரும் நிலையில் இப்படத்திற்காக 10 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுத்து வருகிறார். அப்படி இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்களை லைக்குகளை குவித்து வருகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அஜர்பைஜானில் படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் படக் குழுவினர்கள் சமீபத்தில் சென்னை திரும்பினார்.

டிசம்பர் மாதத்தில் மட்டும் வெளியாகும் 6 தமிழ் படங்கள்.. சமையலில் அன்னபூரணியாக கலக்கும் நயன்தாரா

மேலும் அஜர்பைஜானில் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் நடைபெறுவதாகவும் அதனால் தான் விடாமுயற்சி படக்குழு சென்னை திரும்பியதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து படக்குழுவினர்கள் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

படப்பிடிப்பு கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்து வந்தது. அதேபோல் விடாமுயற்சி படத்தின் அப்டேட் கிடையாது இந்த சூழலில் அஜித் 10 கிலோ வரை எடையை குறைப்பதற்காக தான் இந்த பிரேக் இருந்துள்ளது என்பது தற்போது தான் தெரியவந்துள்ளது. கடைசியாக அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

actor ajith kumar
actor ajith kumar

சால்ட் பெப்பர் லுக்கில் சாதாரணமாக நடித்திருந்த நிலையில் விடாமுயற்சி படத்திற்காக வேற லெவல் கெட்டப்பில் களமிறங்கி இருக்கிறார். அதற்காகத்தான் தனது 10 கிலோ எடையை குறைத்து இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு மாறி உள்ளார். மேலும் மீசை, தாடியை ட்ரிம் செய்து கொண்டு தெளிவான அழகுடன் அஜித் குமார் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.