Thala Ajith Kumar: தல அஜித் குமார் தான் நடித்த படங்களை விட வேண்டாம் என்று நிராகரித்த படங்கள் அதிகம் என கூறப்படுகிறது. தனது சொந்த முயற்சியால் சினிமாவிற்கு அறிமுகமாகி சுமார் 30 ஆண்டு காலங்களாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் தான் தல அஜித். இவர் வேண்டாம் என நிராகரித்த ஒரு டஜன் படங்கள் குறித்த லிஸ்ட்டை பார்க்கலாம்.
மிரட்டல்: அஜித்தை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியினைப் பெற்ற திரைப்படம் தான் தீனா. இப்படத்தினை தொடர்ந்து அஜித்தை மனதில் வைத்து ஏ.ஆர். முருகதாஸ் மிரட்டல் என்ற படத்தினை எழுதியுள்ளார். இப்படத்தில் அஜித் மொட்டை அடிக்க வேண்டும் என இருந்ததால் நடிக்க மறுத்து விட்டாராம் அதன் பிறகு சூர்யாவிடம் கதையை கூற கஜினி என்ற பெயரில் வெளியாகி உள்ளது.
நியூ: எஸ்.ஜே சூர்யாவை இயக்குனராக அறிமுகப்படுத்தி சினிமாவில் வளர்த்து விட்ட அஜித் இதனை அடுத்து மீண்டும் அஜித்தை வைத்து படத்தை இயக்க நியூ படத்தின் கதையை எஸ்.ஜே சூர்யா எழுதிவுள்ளார். ஆனால் அஜித் நிராகரித்ததால் எஸ்.ஜே சூர்யாவே இப்படத்தில் ஹீரோவாக நடித்திருப்பார்.
ஆதாரம் சிக்கியது கூண்டோடு ஜெயிலுக்கு போகபோகும் அர்ஜுன் குடும்பம்.! பரமனை நோக்கி விரைந்த போலிஸ்
நந்தா: பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நந்தா படத்தில் முதலில் சூர்யாவுக்கு பதிலாக அஜித் நடிக்க இருந்துள்ளார். முதலில் ஒப்புக் கொண்ட அஜித் பிறகு படத்திலிருந்து விலகியதால் சூர்யா கமிட்டானார்.
நான் கடவுள்: பாலா, ஆர்யா கூட்டணியில் வெளியான நான் கடவுள் திரைப்படத்தில் முதலில் அஜித் தான் நடிக்க இருந்துள்ளார். இப்படத்திற்கு அஜித்தும் தயாராக இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இயக்குனர் பாலாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இப்படத்தில் இருந்து விலகிவுள்ளார்.
மஹா: அஜித் போலீசாக நடிக்க கமிட்டானா படம் தான் மஹா இப்படத்தை நந்தா பெரியசாமி இயக்க 8 நாட்கள் சூட்டிங் நடைபெற்ற நிலையில் பிறகு அஜித் விபத்தில் சிக்கியதால் இப்படம் கைவிடப்பட்டது.
காங்கேயன்: அஜித், கே.எஸ் ரவிக்குமார் கூட்டணியில் வில்லன், வரலாறு போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து காங்கேயன் படம் உருவானது. இப்படமும் சில காரணங்களால் கைவிடப்பட்டது.
ஏறுமுகம்: அஜித்தை வைத்து அமர்க்களம் படத்தை இயக்கிய சேரன் அடுத்ததாக ஏறுமுகம் என்ற படத்தினை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த படத்தின் கதையில் அஜித்துக்கு விருப்பம் இல்லாத காரணத்தினால் இப்படத்தில் இருந்து விலகினார். பின்னர் ஜெமினி என்ற பெயரில் விக்ரமை நடிக்க வைத்து வெற்றி கண்டார்.
சாருமதி: அஜித் நடிப்பில் 1997.ஆம் ஆண்டு உருவான சாருமதி திரைப்படத்தின் சூட்டிங் பாதி நிறைவடைந்த நிலையில் ஆனால் இப்படத்தில் இருந்து பாதியிலேயே விலகினார் அஜித்.
நேருக்கு நேர்: ராஜாவின் பார்வையிலேயே படத்தினை தொடர்ந்து விஜய்யும் அஜித்தும் இணைந்து நடிக்க இருந்த திரைப்படம் தான் நேருக்கு நேர். இப்படத்தின் 18 நாட்கள் சூட்டிங் நடைபெற்ற நிலையில் இதில் அஜித் விலகியதால் அவருக்கு பதிலாக சூர்யாவை வைத்து இப்படத்தை இயக்கினார் வசந்த்.
இதிகாசம்: சிட்டிசன் படத்தின் வெற்றி நிச்சயம் தொடர்ந்து சரவணன் சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த படம் தான் இதிகாசம். வரலாற்று கதை அம்சமாக அமைந்த இப்படத்தில் அஜித் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகினார்.
திருடா: 2004ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் உருவான திருடா திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார். பாதி ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் பிறகு டிராப்பானது.