நாடு நல்லா இருக்கணும்னு.. அரசியலுக்கு வரவேண்டாம் இதை செய்தாலே போதும்.! அஜித் நச் பன்ச்..

Actor Ajith Kumar old interview

Actor Ajith Kumar old interview: தளபதி விஜய் அரசியலுக்கு அறிமுகமாகி இருக்கும் நிலையில் அரசியல் குறித்து அஜித்குமார் பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில மாதங்களாகவே நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாணவர்களுக்கு பரிசு, நூலகம், நிவாரண உதவிகள் என பலவற்றையும் அறிமுகப்படுத்தி வந்தார்.

அரசியல் கட்சியை பிப்ரவரியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து ஆலோசனை செய்ததாக தகவல் வெளியானது. அதன்படி தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் கட்சி பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாரும் போட்டியிடவில்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

ஆனால் வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளனர். விஜய்யின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடினர். அதன்படி விஜய்யும் நேற்று ரசிகர்களை சந்தித்தார்.

இதனை அடுத்து அரசியலில் நுழைந்துள்ள விஜய்க்கு நடிகர் அஜித்தின் ஆதரவு இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அஜித்குமார் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் தொகுப்பாளராக இருக்கும் சந்தானம் உங்களுக்கு பின்னால் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கு இவர்களை நீங்கள் சினிமாவிற்கு மட்டுமே பயன்படுத்த போறிங்களா இல்லை அரசியலுக்கு வருவீங்களா? என்று கேட்டார்.

Actor Ajith Kumar old interview
Actor Ajith Kumar old interview

அதற்கு பதில் அளித்த அஜித் தலைவர்கள் எப்போதும் நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் ஆனால் நாடு நல்லா இருக்கணும் என்பதற்காக எல்லாரும் அரசியலுக்கு வந்தா அது சரியாக இருக்காது என்னை பொருத்தவரைக்கும் அவர் அவர்களின் கடமையை அவர்கள் சரியாக செய்தாலே நாடு நல்லா இருக்கும் மேலும் ஒவ்வொருவரும் அரசியல்வாதியை குறை சொல்கிறோம் மக்கள் யார் மீதாவது பழியை சுமத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

ஒரே படத்தில் பல பாடகர்கள் இந்த பெருமை கேப்டன் படத்திற்கு மட்டும்தான்.! என்ன திரைப்படம் தெரியுமா.?

அதேபோல உலகம் முழுவதும் உரிமைப் போராட்டங்கள், உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள் ஆனால் கடமையைப் பற்றி யாரும் பேசுவதே இல்லை அவர் அவர்களின் கடமையை அனைவரும் சரியாக செய்தாலே போதும் என்று அஜித் பேசியுள்ளார்.