ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? இப்பவே கண்ணு கட்டுதே..

ajith kumar
ajith kumar

Actor Ajith Kumar: நடிகர் அஜித் ஒரு படத்தில் நடிப்பதற்காக சுமார் 24 கோடியில் இருந்து ரூபாய் 26 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் அவருடைய தொழில்கள் மற்றும் முதலீடுகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் நடிகர் அஜித்குமார் இந்திய சினிமாவிலேயே நடிப்பதில் மட்டுமல்லாமல் பலவற்றிலும் திறமை உடையவராக இருந்து வருகிறார்.

அப்படி இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. என் வீடு என் கணவர் என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஜித் இந்த படத்தினை தொடர்ந்து காதல் கோட்டை, காதல் மன்னன், காதல் தேசம், வாலி, தீனா, வில்லன், சிட்டிசன், முகவரி, வீரம், வேதாளம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து நடித்து கலக்கி உள்ளார்.

இவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 25 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. அதாவது, ரூபாய் 196 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அஜித். ஒரு மாதத்தில் ரூபாய் 2 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. சினிமாவில் நடிப்பதன் மூலம் மட்டும் ஆண்டுதோறும் ரூபாய் 24 கோடி கிடைக்கிறது.

இவ்வாறு இவர் நடிப்பிற்கு வரும் சம்பளத்தை தவிர தனது படங்களில் வரும் லாபத்திலும் ஒரு பங்கை பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் நெஸ்கஃபே, ஏசியன் பெயிண்ட், ராயல் ஸ்டாக் போன்ற பிரபலமான நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் அஜித் இருக்கிறார். இதனை அடுத்து பல தொழில்களை செய்து வரும் இவர் சென்னையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் இணை உரிமையாளராக இருக்கிறார்.

பல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் முதலீடு செய்கிறார், அஜித் ப்ரோடுக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனமும் இருக்கிறது, அப்படி அஜித்தின் தனிப்பட்ட முதலீடுகள் சுமார் 42 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை அடுத்து தனியாக ஜெட் விமானம் ஒன்றையும் அஜித் வாங்கி இருக்கும் நிலையில் இந்த ஜெட் விமானத்தின் மதிப்பு ரூபாய் 25 கோடியாம்.

பிறகு சென்னையில் ஆடம்பர பங்களாவில் வசித்து வரும் அஜித் பைக் ரேஸில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எனவே இதற்காக MRF ரேசிங் சீரிஸ் (2010) மற்றும் JK ரேசிங் ஆசியா சீரிஸ் (2011) ஆகியவற்றிலும் கலந்து கொண்டிருக்கிறார். எனவே இதற்காக ரூபாய் 36 ஆயிரம் கோடி மதிப்புள்ள பிரமாண்டமாக பைக் கார்களை வைத்திருக்கிறார்.

ரூபாய் 34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார், BMW 7-சீரிஸ் 740 Li, Aprillia Caponard பைக், BMW S1000 RR பைக் மற்றும் BMW k1300 S பைக் போன்ற கார்களையும் அஜித் வைத்துள்ளார். அப்படி இந்த பைக்குகளின் விலை மட்டுமே ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 15 லட்சம் வரை இருக்கும் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.