நடிகர் சிபி சந்திரனுக்கு “பரிசு” கொடுத்த அஜித்குமார்.! என்ன தெரியுமா.?

thunivu
thunivu

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது தனது 61 வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் வெற்றிகாராமக நடித்து முடித்துள்ளார் இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் படத்தை தயாரித்திருக்கிறார்.

துணிவு படம் முழுக்க முழுக்க ஒரு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறதாம். இதில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவருடன் இணைந்து பிக்பாஸ் பிரபலங்களான அமீர், சிபி, பாவனி மற்றும் மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் போன்றவர்களும் நடித்து இருகின்றனர்.

இந்த படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கு முன்பாகவே படக்குழு சைலண்டாக பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு அசத்தி வருகிறது கடைசியாக காசேதான் கடவுளடா இரண்டாவது சிங்களை வெளியிட்டு அதிர வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்த சிபி சந்திரனுக்கு பரிசு பொருள் ஒன்றையும் கொடுத்திருக்கிறார்  அது குறித்து சிபி சந்திரன் வெளிப்படையாக பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. துணிவு படத்தில் அஜித்துடன் இருக்கும் நபராக நான் நடித்திருக்கிறேன்.

இந்த படத்தில் வரும் காசேதான் கடவுளடா என்ற பாடல் நேற்று வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது அந்தப் பாடல் ஷூட்டிங்கில் தான் அஜித் எனக்கு ஒரு கண்ணாடியை கிப்டாக கொடுத்தார் என நடிகர் சிபி தனது ட்விட்டர்  பக்கத்தில் கூறியுள்ளார். அந்த கண்ணாடி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டும் உள்ளார். இதோ அந்த புகைப்படம்..