actor ajith decided not to romance with heroines:தமிழ் சினிமாவில் தல அஜித் பழைய திரைப்படங்களை கொடுத்து வசூலில் பின்னி பெடல் எடுத்து வருகிறார். கடந்த வருடத்தில் வெளியாகிய விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதுமட்டுமில்லாமல் விசுவாசம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தை தீபாவளிக்கு தான் வெளியிட இருந்தார்கள். ஆனால் படப்பிடிப்பு தள்ளிப் போனதால் பொங்கலுக்கு வெளியாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநலையில் தல அஜித் தன்னுடைய படத்தில் ஹீரோயினுடன் ரொமான்ஸ் பண்ணுவது கிடையாது என அதிரடியாக முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, வயதுக்கேற்ற கதாபாத்திரம் செய்யலாம் எனவும் முடிவெடுத்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.
60 வயதில் நடிகர்கள் இளம் நாயகிகளுடன் ரொமான்ஸ் செய்யும் பொழுது தல அஜித் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் காதல் இல்லை என்றால் காதல் பாட்டும் இருக்காது. ஆனால் தல அஜித் ரொமான்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட சென்டிமென்ட் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என முடிவெடுத்துள்ளாராம்.
அதனால் தல அஜித் வலிமை திரைப்படத்தின் இயக்குனரிடம் இதை கூறியுள்ளாராம். இயக்குனரும் இந்த முயற்சி நன்றாக தான் இருக்கிறது வலிமை திரைப்படத்தையும் அதற்கு தகுந்தார்போல் எடுக்கிறாராம். அதனால் இனி வரும் அஜித் திரைப் படங்களில் பெரும்பாலும் காதல் காட்சி இருக்காது என கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.