தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நட்சத்திரமாக பார்க்கப்படுவர் அஜித். இவர் சமிப காலமாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக அஜித் நடித்த துணிவு படம் முழுக்க முழுக்க பேங்க் ரபாரி சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகியிருந்தது படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று..
அதிக நாட்கள் ஓடியது அது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டது. துணிவு படம் ஒட்டு மொத்தமாக சுமார் 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி உடன் கூட்டணி அமைத்து ஏகே 62 திரைப் படத்தில் நடிக்க இருக்கிறார்.
லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருள் செலவில் தயாரிக்க உள்ளது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளி வராததால் ஏகே 62 படம் தீபாவளிக்கு வெளியாகுவதில் சிக்கல் என பலரும் கூறி வந்தனர் இப்படி இருக்கின்ற நிலையில் லைகா நிறுவனத்தின் தமிழ் குமரன் ஏகே 62 படம் குறித்து சொல்லி உள்ளது என்னவென்றால்..
இந்த மாதம் நல்ல செய்தி வரும் என கூறியுள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் இன்னொரு தகவல் சமூக வலைதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது அதாவது நடிகை அஜித்திற்கு வெற்றி இயக்குனர் மகிழ் திருமேனி மூன்று கதைகளை சொல்லி உள்ளாராம்.. அதில் முதலில் சொன்ன கதையை தான் ஏகே 62 படமாக எடுக்க இருக்கிறாராம்..
இதில் அஜித் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் ஒன்று வயதான கதாபாத்திரம் இன்னொன்று இளமையான கதாபாத்திரம் எனக் கூறப்படுகிறது. முதலில் வயதான கதாபாத்திரம் உள்ள அஜித் வைத்து தான் படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம் இந்த தகவல் தற்போது சோசியல் மீடிய பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகின்றது.