தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவர் சினிமாவையும் தாண்டி பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் உட்பட இன்னும் பலவற்றில் தனது கவனத்தை செலுத்தி வருவதால் தற்பொழுது உள்ள இளைஞர்களின் ரோல் மாடலாக திகழ்கிறார்.
இவர் நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்து சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துகளையும்,பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாகவும் அமைந்தது . எனவே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இத்திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் தற்போது வரையிலும் அஜித் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளிவரவில்லை. ஆனால் இவர் ஒரு வருடத்திற்கு மேலாக வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் இத்திரைப்படத்தைப் பற்றி பெரிதாக எந்த தகவலும் வெளி வராத காரணத்தினால் ரசிகர்கள் போகுமிடமெல்லாம் வலிமை அப்டேட் கொடுங்கள் என்று போராடி வந்தார்கள். அந்த வகையில் இதனை அறிந்த படக்குழுவினர்கள் இத்திரைப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இத்திரைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீமா குரோஷி நடித்து வருகிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தல அஜித் தனது 61வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் இத்திரைப்படத்தை மூன்றாவது முறையாக அஜித்துடன் கை கோர்க்க உள்ளார் ஹெச் வினோத். அந்தவகையில் கண்டிப்பாக அஜித்தின் 61வது திரைப்படத்தை இயக்குபவர் ஹெச் வினோத் தான் ஆனால் எந்த நிறுவனம் தயாரிக்கின்றது என்ற தகவல் மட்டும் இன்னும் வெளிவரவில்லை.
அந்த வகையில் திரைப்படத்திற்காக அஜித் 65 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இத்தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.