தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் நடிகர் நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி அதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி வெள்ளி திரையில் கால் தடம் பதித்து மென்மேலும் உயர்ந்து வருகின்றனர் ஒரு பக்கம். மறுபக்கம் தங்களது பெற்றோர்களின் பாப்புலாரிட்டியை கொண்டு ஈசியாக சினிமாவில் நுழைந்து விடுகின்றனர்.
அப்படி வாரிசு நடிகர் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதில் ஒருவராக தற்போது சினிமாவில் நுழைந்துள்ளவர்தான் அதிதி சங்கர். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் படிப்பை முடித்துவிட்டு தற்போது தனது சினிமாவில் நுழைந்துள்ளார்.
முதல் படமாக முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளிவந்த விருமன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு பாடலையும் பாடி அசத்தியுள்ளார். அந்த பாடலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. விருமன் படத்தில் அதிதி கிராமத்து கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.
இவரது நடிப்பு தற்போது மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன. மேலும் அதிதிக்கு அதற்குள் அதிக ரசிகர்கள் பட்டாளமும் உருவாகத் தொடங்கியுள்ளனர். விருமன் படத்தைத் தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள மாவீரன் திரைப்படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் அதிதி தொடர்ந்து பல ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
அப்படி ஒரு பேட்டியில் பேசும்போது தனக்கு பிடித்த ஹீரோ ஹீரோயின்கள் குறித்த தகவலை கூறியுள்ளார். அவர் கூறியது சீனியர் ஹீரோக்களில் எனக்கு ரஜினிகாந்தை ரொம்ப பிடிக்கும் மற்றும் இளம் ஹீரோக்களில் சூர்யாவை பிடிக்கும் எனக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஹீரோயின்களில் அவர் கூறியது சமந்தா என்னை மிகவும் கவர்ந்த நடிகை என தெரிவித்துள்ளார்.