சின்னத்திரையில் தனது விடாமுயற்சியினால் வளர்ந்து பிறகு இதன் மூலம் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற தற்பொழுது தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடா முயற்சி ஆனால் சினிமாவில் வளர்ந்து தற்பொழுது உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் பிரபல இளம் இயக்குனர் ஒருவரை சில காரணத்தினால் சந்தித்துள்ளார் அது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சுயாதீன திரைப்பட இயக்குனராக கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 8 தோட்டங்கள் திரைப்படத்தினை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்தத் திரைப்படத்தின் தொடர்ந்து தற்போது ஸ்ரீ கணேஷ் நடிகர் அதர்வா மற்றும் நடிகை ப்ரியா பவானி சங்கர் ஆகியோர்களின் நடிப்பில் மதுரையை மையமாக வைத்து குருதி ஆட்டம் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் குருதி ஆட்டம் திரைப்படத்தின் ‘சிறப்பு திரையிடல்’ சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு திரைப்படத்தினை கண்டுக் களித்துள்ளார். திரைப்படத்தினை பார்த்த பிறகு பட குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். மேலும் இயக்குனர் ஸ்ரீ கணேஷ், தயாரிப்பாளர் முருகானந்தம் ஆகியவர்களுடனும் பேசி மகிழ்ந்துள்ளார்.
இத்திரைப்படத்தில் அதர்வா அஜிதின் ரசிகராகவும், கபடி வீரராகவும் நடித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து ராதிகா சரத்குமார் காந்திமதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிறகு திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தினை ராக்போர்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.