Actor Abbas: நடிகர் அப்பாஸ் தொடர்ந்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது அதில் ஒரு பொண்ணுக்கு 45 நிமிஷம் முத்தம் கொடுத்து போர் அடித்து விட்டது என உண்மையை உடைத்திருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
90 காலகட்டத்தில் சாக்லேட் பாயாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அப்பாஸிற்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகளுக்கு தான் அதிகம் பிடித்திருந்தது. இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தனது மார்க்கெட்டை இழந்ததால் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே இதற்கு மேல் இங்கு இருந்தால் செட் ஆகாது என வெளிநாட்டிற்கு சென்று தொழில் தொடங்க ஆரம்பித்தார். இத்தனை வருடங்களாக வெளிநாட்டிலேயே செட்டிலான இவர் தற்பொழுது சென்னை வந்திருக்கும் நிலையில் தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். நடிகர் அப்பாஸ் கதிரியக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார்.
இவருடைய முதல் திரைப்படமே பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இவ்வாறு பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகராக விளங்கினார். அப்படி துணை நடிகராகவும் நடித்து வந்த நிலையில் சினிமாவில் இருந்து விலகினார்.
தற்போது சென்னை திரும்ப இவர் சமீபத்தில் அவரின் காதலிகள் குறித்து கூறியுள்ளார். அதில் அவர் நான் ஸ்கூல் படிக்கும்பொழுது ஒரு பெண்ணை 45 நிமிடம் முத்தம் கொடுத்து இருக்கிறேன். இந்தி மியூசிக் வீடியோ பண்ணும்பொழுது ஒரு முத்தக் காட்சியில் நடித்தேன். கிட்டத்தட்ட நான்கு கோணங்களில் காட்சியை படமாக்கினார்கள் ஒரு கட்டத்தில் எனக்கும் அந்த நடிகைக்கு முத்தக்காட்சி போர் அடித்து விட்டது என்று அப்பாஸ் கூறி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.