மனைவியின் பிறந்தநாளை விஜய் டிவி பிரபலத்துடன் கொண்டாடிய பிக்பாஸ் ஆரி.. வைரலாகும் புகைப்படம்.

aari and wife
aari and wife

நெடுஞ்சாலை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அந்த திரைப்படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் சினிமாவில் சரியான ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் தள்ளாடி வந்தவர் தான் நடிகர் ஆரி. இவர் தொடர்ந்து வித்தியாசமான கதை உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அதன்பிறகு தான் இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பினை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்ட ஒரே ஒரு நடிகர் இவர்தான் என்று கூற வேண்டும் ஏனென்றால் பலர் இவரிடம் சண்டை போட்டாலும் தனது நேர்மையான குணத்தினால்  ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அந்த வகையில் இதன் மூலம் தற்போது விஜய் மற்றும் அஜித் போன்றவர்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் ஆரிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் பகவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானது.

aari 3
aari 3
aari 2
aari 2

இந்நிலையில் ஆரி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் பகவான் திரைப்படத்தின் ஹீரோயினுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.எனவே ரசிகர்கள் இத்திரைப்படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் ஆரி தனது காதல் மனைவியான நதியாவின் பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளார்.

aari and wife
aari and wife

அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மகேஷ் பாபு மற்றும் ஆரியின் குடும்பம் என ஏராளமானோர் இருக்கும் புகைப்படங்களும் வெளிவந்துள்ளது. இதனை பார்த்த ஏராளமான ரசிகர்கள் ஆரியின் மனைவிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

aari 1
aari 1