48 வருடமாக 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள இந்த சிறு குழந்தை யார் தெரியுமா.! இவரும் பிரபல நடிகர் தான்.! இவருக்கா இந்த நிலைமை

karan

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியாகிய அண்ணாமலை திரைப்படத்தில் வயது வந்தவராக அறிமுகமானவர்தான் இவர். அதன் பிறகு ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நடிகர் கமலஹாசன் நம்மவரில் ஒரு முரட்டு கல்லூரி மாணவனாக தனது நடிப்பால் உச்சத்தை தொட்டவர்.

அதன்பிறகு பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து கொடி கட்டி பறந்தார் இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் கரன் தான். இவர் சினிமாவில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் காரன் மாஸ்டர் ரகு என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்தார்.

பொதுவாக கரன் பல நடிகர்களுடன் இணைந்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார் பின்பு ஒரு காலகட்டத்தில் தனி ஹீரோவாக களம் இறங்க ஆரம்பித்தார். அந்த வகையில் கருப்பசாமி குத்தகைக்காரர் காத்தவராயன் போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்த திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை இந்த நிலையில் சமீபத்தில் கரன் உச்சத்துல சிவா ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பறக்கும் அஜித், விஜய் அவர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றியை தந்தது. இந்த நிலையில் தற்போது எந்த ஒரு திரை படத்தில் நடிக்காமல் சினிமாவிற்கு ஓய்வு கொடுத்து ஓய்வு எடுத்து வருகிறார் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் பேசப்படும் கரண் சினிமாவில் தான் நடித்த திரைப்படத்திற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

karan
karan

அதுவும் அரசால் கொடுக்கப்படும் தமிழ் ஸ்டேட் பிலிம் அவார்டு என்ற விருதையும் வாங்கியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் நடித்துள்ள கோயமுத்தூர் மாப்பிள்ளை லவ்டுடே, காதல் கோட்டை, காதல் மன்னன் என பல திரைப்படங்கள் வெற்றி வாகை சூடியது இந்த நிலையில் சினிமாவில் மீண்டும் எப்பொழுது ரீ என்ட்ரி கொடுப்பார் என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் காரன் அவர்கள் வேல்ஸ் பல்கலைக்கழக உரிமையாளரான விசாரி கணேஷ் அவர்களின் 25 ஆம் ஆண்டு திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

karan