ரோகித் சர்மாவின் கேப்டன் பதவியை பறிக்க அதிரடி முடிவு.? அப்போ யார்தான் கேப்டன்?

rohit-sharma
rohit-sharma

இந்திய அணியின் டி20 கேப்டன் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8 வது டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் மோதியது. அந்த போட்டியில் இந்திய அணி பத்தி விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் கோப்பைகளை கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. அதற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு காரணங்கள் கூறி வருகின்றனர். இந்திய அணி தைரியமின்றி தயக்கத்தோடு விளையாடியது தான் காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்தனர்.

இதனை தொடர்ந்து இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் உள்ளிட்ட மூன்று வகையான போட்டிகளுக்கும் தற்போது  ரோகித் சர்மா அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கடந்த முறை விராட் கோலி மூன்று வகையான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்ட போது பணி சுமையை குறைப்பதாக காரணம் காட்டி அவரிடமிருந்து டி20 கேப்டன் பதவி ரோஹித் சர்மாவிடம் வழங்கப்பட்டதை போல தற்போது ரோகித் சர்மாவிடம் இருக்கும் டி20 கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு தலைமை தாங்கிய முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்தார். இதனால் டி20 அணிக்கு ஒரு ஆல் ரவுண்டர் கேப்டனாக நியமிக்கப்படுவது இந்தியா அணிக்கு மேலும் ஒரு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் அடுத்து வரும் டி 20 உலக கோப்பைக்கு இந்திய அணியை வலுவாக தயார் செய்ய உதவியாக இருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.