நயன்தாரா மீது நம்பிக்கையில்லாமல் விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு..! அதிர்ச்சியான ரசிகர்கள்..!

vignesh-shivan-2
vignesh-shivan-2

தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய ஆசை காதலனுடன் இணைந்து ரவுடி பிக்சர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். அந்தவகையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக சிறுசிறு திரைப்படங்களாக தயாரித்து வெளியிட்டு பல்வேறு விருதுகளையும் வாங்கி வருகிறார்கள்.

அந்தவகையில் இவர்களுடைய தயாரிப்பில் உருவான கூளங்கள் என்ற திரைப்படம் ஆனது தற்போது தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் தற்போது நயன்தாரா மற்றும் சமந்தாவை வைத்து விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தை ரவுடி பிக்சர் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

இது போதாதென்று தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் தன் தங்கையை பங்குதாரராக வைத்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவ்வாறு இதை பார்க்கப்போனால் நயன்தாரா மீது நம்பிக்கை இல்லாமல் விக்னேஷ் சிவன் சொந்த முயற்சியில் இறங்குகிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.

ஏனெனில் விக்னேஷ் சிவன் நயன்தாரா உடன் ஏற்கனவே ஒரு தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த வகையில் தற்போது புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதன் காரணமாக ரசிகர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய திருமண அறிவிப்பு எப்போது வெளிவரும் என்று காத்திருந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டது இருவருக்கும் மன உளைச்சல் ஆனது போல் தெரிகிறது.

vignesh shivan-1
vignesh shivan-1