லைகர் பட நஷ்டத்தை ஈடுகட்ட திரையரங்க உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு. அட இதுவும் நல்லாத்தான் இருக்கு..

laiger
laiger

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்ட இவருக்கு தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் ஏராளம் என்றே சொல்லலாம். மேலும் நடிகர் தேவர்கொண்டா தற்போது லைகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி படும் மோசமான தோல்வியை சந்தித்து வருகிறது.

பூரி ஜெயகாந்த் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா அவர்கள் லைகர் படத்தில்  குத்து சண்டை வீரராக நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் மைக் டைசனும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே  மற்றும் சிலர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய அளவில் செலவு செய்து உருவாக்கிய இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ,கன்னடம் ,ஆகிய மொழிகளில் வெளியானது. மேலும் லைகர் திரைப்படத்தின் கதை என்னவென்றால் தனது அப்பா தவறவிட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை எப்படியாவது பெற வேண்டுமென்றாறு முயற்சிக்கும் மகனின் போராட்டம் தான் லைகர் படத்தின் கதையாகும்.

லைகர் படத்தில் இறுதியில் மைக் டைசனும் விஜய் தேவர் கொண்டாவும் சண்டையிடும் காட்சி ரசிகர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சியைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் கடுப்பாகி மோசமாக விமர்சித்து வருகின்றனர்

இந்த நிலையில் நரசிபட்டின திரையரங்கு உரிமையாளர் லைசர் படத்தின் தோல்வியையும் நஷ்டத்தையும் சரி கட்ட வேண்டும் என்று எண்ணி ஒரு சூப்பர் ஆப்பரை அறிவித்துள்ளார். அதாவது மூன்று டிக்கெட்டுக்கு ஒரு டிக்கெட் ப்ரீ என அந்த திரையரங்கை சுற்றியுள்ள ஊர்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த தியேட்டரின் உரிமையாளர் நர்சிபட்டினம் ‘எம், எல், ஏ’வின் தம்பி என்பதால் எம், எல், ஏவின் ஆதரவாளர்கள் இந்த படத்தை பார்த்தே தீருவோம் என்று கூறியுள்ளனர். இதனாலேயே அந்த திரையரங்கில் கல்லா கட்ட போகிறதாக சில வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.