தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியாகிய கைதி, மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது இதனை தொடர்ந்து கமலஹாசன் அவர்களை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவை தலை நிமிர செய்தது.
விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தியது. இந்த நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜயை வைத்து லீயோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் அவர்கள் தயாரித்து வருகிறார் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார், அது மட்டும் இல்லாமல் கௌதம் மேனன், அர்ஜுன், மிஸ்கின், சஞ்சய் தத் மன்சூர் அலிகான் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று முடிந்தது அதனை தொடர்ந்து மீதமுள்ள காட்சிகள் சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அப்படி இருக்கும் நிலையில் லியோ திரைப்படத்தில் விஜய் மற்றும் அர்ஜுன் சண்டை காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டை காட்சி சென்னையில் உள்ள ஆதித்தராம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் லியோ திரைப்படத்தில் அர்ஜுன் பாதி எரிந்த முகத்துடன் சண்டை போடுவார் என தகவல் கிடைத்துள்ளது.
லியோ திரைப்படத்தின் கதை பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஏ ஹிஸ்டாரி ஆப் வயலன்ஸ் என்ற திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டு இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஹெட் ஹாரிஸ் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை தற்பொழுது நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிய வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படத்தில் ஹெட் ஹாரிஸ் மிகவும் கொடூர வில்லனாக நடித்திருப்பார் அதனால் அர்ஜுனனின் கதாபாத்திரம் கொடூரமானதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.