கடுமையான கட்டுப்பாடில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு வெளிவந்த அதிரடி தகவல்.!

vikram

தமிழ் சினிமா உலகில் பல ஹிட்டடித்த திரைப்படங்களை இயக்கியுள்ள இயக்குனர்களில் ஒரு முக்கியமான இயக்குனர் தான் மணிரத்தினம் இவரது இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் உருவாகி வந்தது கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமேதி ஃபலிம் சிட்டியில் தற்பொழுது நடந்து வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி,கார்த்திக்,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் தளத்தில் இருந்து ஒரு முக்கியமான தகவல் இணையதளத்தில் வெளியாகியாகியுள்ளது.

அந்த தகவல் என்னவென்றால் கொரோனா பரவல் காரணமாக நடிகர்கள்,நடிகைகள் ஓட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் வேறு எங்கும் செல்லக்கூடாது படப்பிடிப்பு முடிந்ததோடு ஹோட்டலுக்கு தான் செல்ல வேண்டும் என படக்குழுவினர்கள் கடுமையாக உத்தரவிட்டு இருக்கிறார்களாம்.

அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விட்டால் வெளியேயும் செல்லக் கூடாது என்று படக்குழுவினர்கள் கூறியதாக இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சீக்கிரம் படப்பிடிப்பை முடியுங்கள் என படக்குழுவினர்களை கூறிவருகிறார்கள்.

karthik
karthik