ஆக்சன் படங்களை இயக்குவதில் ரொம்ப கை தேர்ந்தவராக இருப்பவர் இயக்குனர் ஹரி இதுவரை இவர் பல்வேறு விதமான ஆக்சன் திரைப்படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் சிங்கம், பூஜை, வேங்கை, சாமி, வேல், ஆறு, சேவல் என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல ஆக்சன் படங்களை கொடுத்துள்ளார்.
இந்தப் படங்களில் மூலம் சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்களை வளர்த்துவிட்டு உள்ளார் இயக்குனர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது இயக்குனர் ஹரி முதல் முறையாக நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து யானை திரைப்படத்தை இயக்கினார் இந்த படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளிவந்தது.
இதுவரை படம் வெளிவந்து மூன்று நாட்களில் மட்டும் சுமார் 9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற நாட்களிலும் நல்லதொரு வசூலை அள்ளும் என தெரிய வருகிறது இதனால் படக்குழு தற்போது செம்ம சந்தோஷத்தில் இருக்கிறதாம். இப்படி இருக்கின்ற நிலையில் யானை படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்பொழுது..
இயக்குனர் ஹரியிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக நீங்கள் நடிகர் விஜய் வைத்து படம் இயக்குகிறீர்களா என கேட்டுள்ளனர். இதற்கு இயக்குனர் ஹரி பதிலளித்தது. விஜய்யை நான் பலமுறை சந்தித்துள்ளேன். பல கதைகள் அவரிடம் கூறியுள்ளேன். ஆனால் அதன் பிறகு கதையை எடுத்துச் சொல்ல முயற்சிக்கவில்லை.
வருங்காலத்தில் கண்டிப்பாக தளபதி விஜய் வைத்து படம் பண்ணுவேன் என உறுதியாக பதில் அளித்தார் இயக்குனர் ஹரி. ரசிகர்களும் நீங்கள் இருவரும் சேர்ந்தால் அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் எனவும் சொல்லி வருகின்றனர்.