இயக்குனர் ஷங்கர் தமிழை தாண்டி மற்ற மொழிகளில் படங்களை இயக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ராம்சரண் வைத்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தில் கைரா அத்வானி, அஞ்சலி போன்ற பலர் நடிக்கின்றனர் இது ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க தமிழில் இவர் கடைசியாக கமலை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை ஆர்வம் எடுத்து வந்தார்.
திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் எதிர்பாராத விதமாக சில விபத்துகள் ஏற்பட அதில் ஒரு சில தொழிலாளர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் உயிரிழந்தனர் இதனையடுத்து லைகா நிறுவனம் இந்த படத்தை கிடப்பில் போட்டது இதனை அடுத்து ஷங்கர் மற்றும் கமல் ஆகியோர் அடுத்தடுத்த கட்ட நோக்கி மேற்கொண்டனர். ஒரு கட்டத்தில் லைகா நிறுவனம் பணம் அதிகமாக போட்டதை அடுத்து இனியும் படத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால் பணம் மொத்தமும் பாழாகிவிடும் என கூறி கோர்ட்டில் கேஸ் போட்டது.
முதலில் ஒருவருமே ஒத்துழைக்காமல் இழுத்துக்கொண்டே சென்றது சமீபத்தில் இந்த கேஸ் ஒருவழியாக சமரசமாகி படக்குழு மீண்டும் இந்தியன் பட வேலைகளை துவங்க இருப்பதாக தெரிகிறது இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என தெரியவந்தது படத்தில் கமலுடன் கைகோர்த்து காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், சித்தார்த், டெல்லிகணேஷ், விவேக் போன்ற பலர் நடித்திருந்தனர்.
மீண்டும் ஷூட்டிங் தொடங்க இருப்பதால் ஒவ்வொருவரையும் தற்பொழுது கமிட்டாகி இருந்த படங்களை சீக்கிரம் முடித்துவிட்டு இந்த படங்களில் இணைய சொல்லி உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்திலிருந்து ஒரு சிலரின் காட்சிகளை தூக்கிவிட்டு இருக்கிறது முதல் முறையாக உலக நாயகன் கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்தார் ஆனால் இடையில் இவருக்கு மாரடைப்பு வந்து காலமானார்.
அவரை தொடர்ந்து இந்த திரைப் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வந்த காஜல் அகர்வால் வயதான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதை எடுத்து அவர் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளார் இதனையடுத்து இருவரது கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை நடிக்க வைக்க தற்போது முடிவு செய்த்துயுள்ளது. இதனால் இந்தியன் 2 படத்தில் மீண்டும் இரண்டு கதாபாத்திரங்கள் காட்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.