ராகவா லாரன்ஸுக்கு விழும் பெரு அடி.! ருத்ரன் படத்திற்கு அதிரடி தடை…

rudhran
rudhran

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருந்தது ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக தற்போது ரிலீஸ் தேதி ஏப்ரல் 24ஆம் தேதி தள்ளிப் போனதாக கூறப்படுகிறது.

ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் ஜோடியாக பிரியா பவானி சாகர் நடித்துள்ளார் மேலும் அவருடன் இணைந்து பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த ட்ரெய்லரை பார்த்த நெட்டிசன்கள் காஞ்சனா படம் போல இருப்பதாக கூறி வருகிறார்கள் ஒரு தரமான ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் ருத்ரன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் ருத்ரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட உத்தரவிட்டிருக்கிறது இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

எதற்காக ருத்ரன் திரைப்படம் தள்ளிப்போனது என்றால் ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழி டப்பிங் உரிமைகளை ரெவன்சா என்று ஒரு நிறுவனம் 12.5 கோடிக்கு விலை பேசி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முன் பணமாக 10.5 கொடி கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்னும் 4.5 கோடி கொடுத்தால் தான் டப்பிங் உரிமையை தருவோம் என்று கூறியதாக கூறப்படுகிறது அப்படி தர மறுத்தால் டப்பிங் உரிமைகளை தர முடியாது என்று கூறியதாகவும் கூறபடுகிறது.

இதனால் ரெவன்சா நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றது. நீதிபதி வழக்கை விசாரித்து பார்க்கையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட உத்தரவிட்டிருக்கிறது. இதை பிரபல விமர்சகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.