சினிமா உலகில் வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே தான் இருக்கிறது அந்த வகையில் நடிகர் தனுஷ் அவரது அப்பா மற்றும் அண்ணனின் உதவியின் மூலம் சினிமா உலகில் கால் தடம் பதித்து இருந்தாலும், தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்திருந்தார் அதை சரியான கதைகளில் பயன்படுத்தி வெற்றியை சம்பாதித்ததோடு..
தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கினார் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனுஷ் கட்டத்திற்கு மேல் சினிமா உலகில் தனுஷ் எந்த மாதிரியான கதை கொடுத்தாலும் அதில் தனது முழு திறமையும் காட்டக் முடியும் என்ற அளவிற்கு வளர்ந்தார். மேலும் இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் அதில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது.
அந்த வகையில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், கர்ணன், யாரடி நீ மோகினி என சொல்லிக்கொண்டு போகலாம். இப்பொழுது கூட தனது திறமையை சிறப்பாக வெளிகாட்டும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து உள்ளார். தனுஷ் கையில் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றன.
இதில் ஒவ்வொரு திரைப்படமும் அடுத்தடுத்து வெளிவர இருப்பதால் தனுஷ் தற்போது செம சந்தோஷத்தில் இருக்கிறார் இது தவிர க்ரே மேன் படத்தின் இரண்டாவது பாகத்திலும் தனுஷ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளி வருகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷ் மறைந்த நடிகர் ரகுவரன் குறித்து பேசி உள்ளார்.
ரகுவரன் சார் உடன் ஒரே பிரேமில் நடிப்பது ரொம்ப சவாலாக இருந்தது. ரகுவரன் நடிப்பில் மிரட்ட கூடியவர் அவருடன் நடித்தது எனக்கு ரொம்ப சிரமமாக இருந்தது. மேலும் அப்பா மகனாக நாங்கள் இருவரும் யாரடி நீ மோகினி படத்தில் நடித்தது அந்த கெமிஸ்ட்ரி சூப்பராக எங்களுக்குள் பொருந்தியது என தனுஷ் வெளிப்படையாக பேசியிருந்தார்.