சமந்தாவிற்கு முதல் காதல் பிரேக் அப் ஆனது எங்கே தெரியுமா.! ரசிகர்களிடம் வைரலாகும் சமந்தாவின் பதிவு..

samantha 1
samantha 1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் எப்படி பிரபலமடைந்துள்ளாறோ அது போலவே தெலுங்கிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தற்பொழுது தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்பொழுது இவர் ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்குப் பிறகு சமந்தாவிற்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.எனவே இவர் ஒரு படத்திற்கு 3 முதல் 5 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். இவருடைய இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மற்ற நடிகைகளைப் போலவே இவர்  பல காதல் சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். சமந்தா முதலில் சித்தார்த்தை காதலித்து வந்ததாகவும் லிவ்விங் டுகெதரில் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை சமந்தாவும் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.

நிலையில் திடீரென்று நடிகர் நாக சைன்யாவை  காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர்கள் ஹைதராபாத்தில் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது தனது சொந்த ஊரான சென்னையில் உள்ள பல்லாவரத்திற்கு தன்னுடைய குடும்பத்தினர்களை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

அதில் பல்லாவரத்தில் ஒரு இடத்தை பிடித்து இங்குதான் என் முதல் காதல் பிரேக் அப் ஆனது என்று கூறியிருந்தார்.அதில் தனது பள்ளிப் பருவத்தில் நடந்த சில விஷயங்களையும் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த பல ரசிகர்கள் இவர் பள்ளி பருவத்தை தான் தனது முதல் காதல் என்கிறாரோ என கமெண்ட் செய்து வந்தார்கள் ஆனால் மற்ற சிலர் இங்குதான் நடிகர் சித்தார்த் மற்றும் சமந்தா இவர்களின் காதல் பிரிந்ததோ என்றும் கூறிவருகிறார்கள்.

samantha
samantha