பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது உண்மையை போட்டுடைத்த அனுஷ்கா ஷெட்டி.!

anushka shetty
anushka shetty

பொதுவாக சினிமா என்றாலே நடிகர்களுக்கு சாதகமான ஒன்றாக தான் இருந்து வருகிறது. ஒரு நடிகர் தனது இளம் வயதில் இருந்து  வயதானாலும் கூட அவர்களால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறது அதற்கு உதாரணமாக ரஜினி, கமல் போன்ற வரை கூறலாம்.

ஆனால் நடிகைகள் என்றால் அவர்களின் இளமையும் அழகும் குறையும் வரை மட்டும்தான் அவர்களால் தொடர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர முடியும் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சிலர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

முன்னணி நடிகையாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அனுஷ்கா ஷெட்டி சமீப காலங்களாக பெரிதாக திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் தமிழையும் தாண்டி தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்து கலக்கி வந்தார்.

இவ்வாறு மிகவும் நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் நடித்தது இவருக்கு பெரிய மைனஸ்சாக அமைந்தது. இந்தத் திரைப்படத்திற்காக தனது உடல் எடையை பலமடங்கு உயர்த்தியதால் தற்போது வரையிலும் தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைமைக்கு வர முடியவில்லை இதுவே இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைப்பதற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க தற்போது அனுஷா ஷெட்டிக்கு 40 வயதிற்கு மேல் ஆகிவிட்டதால் எப்போது இவரது திருமணம் என்ற கேள்வியை எழப்பட்டு வரும் நிலையில் சில நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு இவர்தான் அனுஷ்கா ஷெட்டியின் வருங்கால கணவர் என்று வதந்திகள் வந்த நிலையில் அனைத்தையும் மறுத்து எனக்கு தற்போது திருமணம் கிடையாது என்று கூறினார்.

இந்நிலையில் அனுஷ்கா ஷெட்டி முன்பு கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் பொதுவாக சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் ஆனால் இதுவரையிலும் இது போல் எனக்கு நடந்ததில்லை என்று கூறியுள்ளார்.