தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். தற்பொழுது இவர் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நெட்பிலிம்ஸ்-சில் வெளிவந்த பிட்ட காதலு திரைப்படத்தில் மிகவும் ரொமான்டிக்காக நடித்து இளைஞர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இவர் இயக்குனர் ஏ.எல் விஜய் காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இந்த விவகாரத்திற்கு பிறகு மனமுடைந்த அமலாபால் தொடர்ந்து கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காண்பித்து வருகிறார். அந்தவகையில் 2019ஆம் ஆண்டில் ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆடை.
இத்திரைப்படத்தில் அமலாபால் 16 நாட்கள் ஆடை இல்லாமல் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.இப்படத்திலிருந்து அமலாபால் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது மஞ்சள் நிற குட்டையான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அப்புகைப்படத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரண் ஜோஹர் உட்பட இன்னும் சில பாலிவுட் பிரபலங்களும் அமலாபாலுடன் இணைந்திருக்கிறார்கள். இதோ அந்த புகைப்படம்.