சினிமா உலகில் பல நடிகர்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடிக்க முடியாமல் இருக்கின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் பல்வேறு சிறப்பான படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் சித்தார்த்.
இவர் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன்பின் பாய்ஸ், ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் nh4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன் ஆகிய படங்கள் நல்ல பெயரை பெற்றுத் தந்தன.
தமிழில் எப்படி நல்ல படங்களில் நடித்து வரும் அதேபோல மறுபக்கம் வருகின்ற பிறமொழி படங்கள் வாய்ப்பையும் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான அதே சமயம் ரசிகர்களை கவரக்கூடிய படங்களாக இருந்தாலும்..
இவரது சினிமா மார்க்கெட் மற்றும் உயராமல் அப்படியே இருக்கிறது இருப்பினும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். இவர் தற்போது பாலிவுட் பக்கமும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் அதுபோல தற்போது நடிகர் சித்தார்த் வெப் சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் சொன்னது நான் டெல்லி பையன் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள் ஹிந்தி நன்றாகவே பேசுவேன் அதனால் இந்தி மொழியில் சுவாரசியமாக இருக்கும் ஸ்கிரிப்டுரல் வந்தால் நடிக்கிறேன் வித்தியாசமான ரோல் கிடைக்கும் வரை நடிப்பேன் கிடைக்கவில்லை என்றால் நான் வேறு வேலை ஏதாவது பார்ப்பேன் என அவர் கூறினார்.