சினிமா உலகில் பல வருடங்களாக நடிக்கும் நடிகர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்களே தவிர ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள் சொல்ல வேண்டுமென்றால் 70 வயதிற்கு பிறகு சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்கள் கூட ஹீரோவுக்கு அப்பாவாக தாதாவாக தான் நடித்து அசத்தி உள்ளனர்.
ஆனால் அவர்கள் ஹீரோவாக நடித்தது கிடையாது இப்பொழுது ரஜினி விஜயகாந்த் அவர்கள் ஹீரோவாக நடித்து வந்தாலும் வருகின்ற காலகட்டங்களில் அவர்கள் ஹீரோவாக நடிப்பாரா என்பது கேள்விக்குறிதான் ஆனால் ஒருவர் மட்டும் 75 வயதிலும் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார். அதுவும் ஒரு படம் ரெண்டு படம் அல்ல.. பல படங்களில் அவர் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார்.
சொல்ல வேண்டுமென்றால் ரஜினி, கமல், சிவாஜி, ஜெமினி போன்றவர்கள் கூட இப்படி நடித்தது கிடையாது என கூறப்படுகிறது அந்த நடிகர் வேறு யாருமல்ல காமெடி நடிகர் கவுண்டமணி தான் தனது 75 வயதிலும் ஹீரோவாக நடித்துள்ளார் இவர் நேற்று தனது 83வது பிறந்த நாளை வெகு விமர்சியாக கொண்டாடினார்.
அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் கவுண்டமணி சினிமா ஆரம்பத்தில் வில்லனாகவும் காமெடியனாகவும் நடித்து வந்தாலும் காலங்கள் போகப்போக சிறப்பான கதைகள் வந்ததால் அதில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் அந்த படங்களும் இவருக்கு சுமாரான வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது.
75 வயதில் ஹீரோவாக இவர் நடித்த படங்கள் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, 49 ஓ, வாய்மை என மூன்று படங்களில் நடித்துள்ளார் இவரைத் தாண்டி கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் 87 வயதில் தாதா87 என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.