சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி இவர் விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக தனது இளம் வயதிலிருந்து தற்போது வரை விஜய் டிவியில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்ந்து வருபவர். அப்படி விஜய் டிவியில் காபி வித் டிடி, எங்கிட்ட மோதாதே, விஜய் டெலி அவார்ட்ஸ், நாளைய தீர்ப்பு போன்ற அனைத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
மேலும் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை டிடி காகவே பல ரசிகர்கள் கண்டுகளித்து வந்தனர். ஆனால் சில காலங்களாக விஜய் டிவி பக்கம் அதிகம் டிடி தென்படவில்லை எனினும் ஒரு சில முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே டிடி தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக கூட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ஒரு நேர்காணல் உரையாடளில் டிடி கலந்து கொண்டார்.தற்போது டிடி சில திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியது
அதில் நடிகர் சுந்தர் சி, ஜெய், ஜீவா போன்ற முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கும் ஒரு திரைப்படத்தில் டிடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடி பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்.
அப்படி தற்போது பச்சைக் கலர் ஷர்டில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு செம க்யூட்டாக அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சிலவற்றை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றன.