“பீஸ்ட்” படத்தை தொடர்ந்து படுதோல்வி அடைந்த ஆச்சாரியா.? வெளிவந்த தகவல்.!

achariya
achariya

தென்னிந்திய சினிமா உலகில் அண்மை காலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் ஆகின்றன ஆனால் ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டாலும், எதிர்பார்த்த அளவிற்கு பிரமாண்டமாக இல்லாமல் தோல்வியை தழுவுவது வழக்கமாகி உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை எதிர்நோக்க வைத்தது ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக இல்லாததால் கலவையான விமர்சனத்தை பெற்று ஓரளவு வசூல் வேட்டையை நடத்தியது.

அதேபோல தற்போது தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய ஸ்டாராக விஸ்வரூபம் எடுத்தவர் நடிகர் சிரஞ்சீவி இவர் அண்மையில் தனது மகன் ராம்சரணுடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் தான் ஆச்சார்யா இந்த படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லாததால் தற்போது சுமாரான வசூலைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. ஆச்சார்யா படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் சுமார் 140 கோடியில் படம் தயாரானது ஆனால் படம் தற்போது நஷ்டத்தை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது இப்போதே வந்த தகவலின் படி நஷ்டம் மட்டுமே சுமார் 50 கோடிக்கும் மேலாக இருக்கும் என தகவல்கள் உலா வருகின்றன.

டாப் நடிகர்கள் படங்கள் இப்படி தோல்வியை தழுவுவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ரசிகர்கள் முன்பு போல் இல்லாமல் இப்பொழுது  டாப் நடிகர் படமாக இருந்தாலும் படத்தின் கதை அம்சம் சிறப்பாக இருந்தால் மட்டுமே திரையரங்கை நாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.