கடந்த நான்கு வருடங்களாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பெரும் ஆதரவை பெற்றது.
பிக் பாஸ் சீசன் 3 யில் கவின் மற்றும் லாஸ்லியா காதல் போல இந்த சீசனின் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணன் காதல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது.
இவர்களைத் தொடர்ந்து சோம் சேகர் மற்றும் ரம்யா காதலை பற்றி பேசப்பட்டு வந்தாலும் ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ் இவர்களின் காதல் அளவிற்கு இல்லை.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 முடிந்த பிறகு சோம் சேகர் தனது இன்ஸ்டாகிராம் ரம்யா பாண்டியனைப் பற்றி சில நல்ல விஷயங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் நேரடியாக பதில் வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் சோம் சேகருக்கும் உங்களுக்கும் எப்பொழுது திருமணம் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அதிர்ச்சி அடைந்த ரம்யா பாண்டியன் அவர் ஒரு நல்ல நண்பர் மட்டும் தான் மற்றவர்களிடம் எப்படி சகஜமாக பழகினோம் அதேபோல்தான் அவரிடமும் பழகினேன் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனை அறிந்த ரசிகர்கள் சிலர் நடிகை புத்தியைக் காட்டி விட்டார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சோம் சேகரும் வருத்தத்தில் உள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது.