தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் தல அஜித். இவர் கடைசியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் உருவாக்கியிருந்தார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அஜித் மற்றும் எச் வினோத் கூட்டணியில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்து விட்டதாகவும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் மிகவும் வேகமாக பரவி வருகிறது. எனவே தல அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தனது 61வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். சில மாதங்களுக்கு முன்பே வினோத் அஜித்திடம் ஒரு கதை கூறியதாகவும் அந்த கதை அஜித்திற்கு பிடித்ததால் தற்போது மீண்டும் வினோத் உடன் கை கோர்க்க உள்ளார்.
இத்திரைப்படத்தை போனிகபூர் அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தல அஜித் தனது இன்னும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கியிருந்த சுதா கொங்குரா அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளாராம். இதனை தொடர்ந்து மற்றொரு படத்தை அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வரும் சிவா இயக்க உள்ளாராம்.
இதற்கு முன்பு சிவா மற்றும் அஜித் கூட்டணியில் வீரம்,வேதாளம், வேதாளம்,விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.