தளபதி ரசிகர்களுக்கு பிப்ரவரி மாதம் பெரும் இன்ப அதிர்ச்சி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாக தளபதி 67 திரைப்படத்திற்காக அப்டேட் எப்போது வெளியாகும் என்று திரைத் துறையை சேர்ந்த பலரிடம் பலவிதமாக கேள்வியாக கேட்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடமே நேரடியாக சென்று தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் எப்போது வரும் என்று பத்திரிகையாளர் கேட்டிருந்தனர் அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் இன்னும் சிறிது காலத்தில் வந்துவிடும் என்று கூறியிருந்தார் அது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் நடிகர் விஜய் அவர்கள் வாரிசு படத்தில் நடித்து வந்ததால் வாரிசு படம் வெளியான உடனே தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும் என்று கூறியிருந்தார்.
அந்த வகையில் வாரிசு படம் வெளியான பிறகு வாரிசு படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த லோகேஷ் கனகராஜ் இடம் பத்திரிக்கையாளர்கள் தளபதி 67 குறித்து அப்டேட் சொல்லுங்கள் என்று கூறியதற்கு இன்னும் பத்து நாட்களில் அப்டேட் வெளியாகி விடும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இன்று வரையிலும் தளபதி 67 திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை இதனால் மனம் உடைந்து போன ரசிகர்களுக்கு அவ்வப்போது தளபதி 67 திரைப்படத்திலிருந்து சில தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தது அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் 50 வயது கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் தளபதி 67 திரைப்படத்தில் பிக் பாஸ் ஜனனி, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் என்று சமீப காலங்களாக பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் தளபதி 67 திரைப்படத்தில் இருந்து அப்டேட் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிவிடும் என்று ஒரு தகவல் பரவியது.
ஆனால் தற்போது அந்த தகவல் பொய்யான தகவல் என்பது போல ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது அதாவது தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து வெளியாகும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த அப்டேட் 67 வினாடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோவாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அந்த வீடியோ முழுக்க நடிகர் விஜய் மட்டுமே இருப்பார் என்றும் கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் என்னவென்று அந்த வீடியோவில் தெரிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பிப்ரவரி மாதத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.