தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால் இவர் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தாலும் போகப்போக ஆக்சன் இவருக்கு ரொம்ப செட்டாகவே ஒரு கட்டத்தில் தொடர்ந்து இப்பொழுது வரையிலும் ஆக்சன் திரைப்படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்.
அந்த வகையில் இவர் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லத்தி. இந்த படத்தில் விஷால் முழுக்க முழுக்க ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஆக்ஷன் சீன்களுக்கு பஞ்சமில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக கடைசி காட்சியில் மட்டுமே நடிகர் விஷால் 100க்கும் மேற்பட்ட ரவுடிகளை அடித்து நொறுக்குவது போல நடித்துள்ளாராம்.
இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே விஷாலுக்கு ஏகப்பட்ட அடிகள் விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் அடுத்ததாக மார்க் ஆண்டனி என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
மார்க் ஆண்டனி திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தற்பொழுது போய்க்கொண்டிருக்கிறது. அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் உடம்பில் கை கால்கள் போன்ற பகுதிகளில் விஷாலுக்கு அடிபட்டுள்ளது அதன் புகைப்படங்கள் கூட தற்பொழுது வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதை வைத்து பார்க்கும் பொழுது தெரிகிறது ஒவ்வொரு படத்திற்கும் கடினமாக நடிகர் விஷால் உயிரை பணயம் வைத்து நடித்து வருகிறார். ஏற்கனவே லத்தி படத்தில் ஏற்பட்ட விபத்து தற்போது இந்த படத்திலும் அடிபட்டுள்ளது அவரது ரசிகர்களை சற்று கண்கலங்க வைத்துள்ளது. இதோ நடிகர் விஷாலை நீங்களே பாருங்கள்..