Aboriginal student unable to attend medical college due to lack of caste certificate: கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் உள்ள ரொட்டி கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள சமவெளியில் மலசர் என்னும் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியின மக்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள்கூட சமவெளியில் வாழும் மக்களுக்கு கிடைப்பதில்லை.
இங்கு வாழ்ந்து வரும் இந்த பழங்குடியின மக்களுக்கு 6லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறையும் பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. மேலும் மின்சாரம் சாலை போன்ற வசதிகள் இன்று வரை வந்து சேரவில்லை.
அதுமட்டுமல்லாமல் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் துவங்கி அப்படியே நிற்கிறது. இங்கு வாழும் மக்களுக்கு இரவு மட்டுமல்லாமல் பகல் கூட இருட்டாகத்தான் இருக்கிறது. எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இந்த கிராமத்திலிருந்து முதன்முதலில் மருத்துவ படிப்பிற்காக செல்லும் மாணவி தான் சங்கவி.
இவர் 2 வருடங்களுக்கு முன் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில். சங்கவி ஜாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். சங்கவி போன்ற பெண்ணிற்கு ஜாதிச் சான்றிதழ் பெறுவது என்பதே பெரும் போராட்டமாக உள்ளது.