பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு பிடித்த நிகழ்ச்சி என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் தற்போது இரண்டு வாரங்கள் கடந்தும் இதுவரை இந்த சீசனில் எந்த ஒரு சண்டையும் சச்சரவும் இல்லாமல் மௌனம் காத்து சென்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கடந்த வாரம் அபிஷேக் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு சென்றதன் காரணமாக சுவாரசியமும் இல்லாமல் போய்விட்டன.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியோ ஒருவருக்கு ஒருவர் சண்டை மூட்டி பார்த்து வருகிறார்கள் ஆனால் இதுவரை யாரும் சண்டை போட்டார்கள் என்றால் அது கிடையாது இதன் காரணமாக விஜய் டிவியில் பிக் பாஸ் டி ஆர் பி யில் பின்னடைவை சந்தித்து வருகிறது.
அந்த வகையில் அபிஷேக் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவரைப் பற்றிய நெகட்டிவ் கமெண்ட் அளவுக்கு அதிகமாக சமூக வலைதள பக்கத்தில் வெளிவந்தது இவற்றை அவர் வெளியில் வந்தவுடன் தெரிந்து கொண்டிருப்பார். அந்த வகையில் பேசுறேன் பேசுறேன் பேசிக்கொண்டே இருக்கிறேன் என்ற ஒரு கருத்து தான் இவர் மீது விமர்சனமாக வைக்கப்பட்டது.
பொதுவாக அபிஷேக் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற கர்வம் கொண்ட காரணத்தினால் சிலநாட்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்த அபிஷேக் தன்னை தவறாக கேலி செய்தவர்களை அசிங்க அசிங்கமாக திட்டுவேன் என்று கூறியது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலானது மட்டுமல்லாமல் நெட்டிசன்களுக்கு சரியான பேசும் பொருளாக ஆகி விட்டது.