பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணமே இருப்பதன் காரணமாக இந்த தொலைக்காட்சி டிஆர்பி யில் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் இதற்கு முக்கியத்துவம் உள்ள ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார் இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்து நான்காவது சீசன் மிக சிறப்பாக முடிவடைந்துள்ளது. தற்போது ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த ஐந்தாவது சீசன் வீட்டை கமலஹாசன் சுற்றி காட்டியது மட்டுமல்லாமல் இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் பிரபல திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களும் சின்னதிரை பிரபலங்களும் தான் பெருமளவில் கலந்து கொண்டுள்ளார்கள் ஆனால் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு இப்படி ஒரு திருநங்கையை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். ஆனால் அதற்காக இவரை பிரபலம் என்று சொல்லாமல் இருக்க முடியாது எனில் பல்வேறு அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றவர் தான் நமது நமிதா மாரிமுத்து.
அந்தவகையில் வீட்டிற்குச் சென்ற திருநங்கையிடம் உங்களுடைய செருப்பை கழட்டி நீங்கள் எவ்வளவு உயரம் என்பதை பார்க்க வேண்டும் ஏனெனில் போட்டியாளர் ராஜீவை விட நீங்கள் உயரமா என்பதை பார்க்க ஆசை என யூடியூப் பிரபலம் அபிஷேக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நமது திருநங்கை நமிதாவும் தன்னுடைய செருப்பை கழட்டி விட்டு ராஜீவின் அருகே சென்றுள்ளார். இவ்வாறு உலக நாடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்த ஆராய்ச்சியின் முடிவை அபிஷேக் வெற்றிகரமாக முடித்துள்ளார்.